Thursday, May 18, 2017

இணையம்




                                            இணையம் என்பது பல்வேறுபட்ட இலத்திரனியல் கருவிகளை வலைப்பின்னல் மூலம் இணைக்கும் ஒரு கட்டமைப்பு என்று எளிதில் விளங்கும்படிக் கூறலாம். நீங்கள் பார்க்கும் கூகிள், பேஸ்புக் என்பன உண்மையில் இணையம் அல்ல! அவற்றை நாம் உலகளாவிய வலை (world wide web, or the web) என்று அழைக்கிறோம். இது உண்மையிலே           இணையத்தின் மூலம் செயற்படும் ஒரு பெரிய சாப்ட்வேர் என்று கருதலாம். உலகளாவிய வலை போல, ஈமெயில், இணையத் தொலைபேசித் திட்டம், கோப்புப் பரிமாறல் போன்ற பல்வேறு பட்ட வித்தியாசமான தொழில்நுட்பங்கள் இணையத்தைப் பயன்படுத்தி வேலை செய்கின்றன


1 comments: